25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

news

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பொறுப்பு வாய்ந்தவர்களது உதாசீன நடவடிக்கை காரணமாக ஆத்திரமடைந்து உயர்பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் நுழையமுற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பகல் 11.00 மணியளவில் ஆத்திரமுற்ற மக்கள் பொலிஸ்காவலையும் மீறி பிரதெச செயலகத்தினுள் நுழைந்து தமது குறைகளை பிரதேச செயலாளரிடம் முறையிட முயன்றார்கள்.

பிரதேச சபை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பிரிவினர் வாசலில் வைத்து மக்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காங்கேசன்துறை வீதிவழியாக தமது காணிகளுக்கு செல்லவேண்டும் எனக் கூறி போராட்டக்காரர்கள் உயர் பாதுகாப்பு வலயத்தை நோக்கி ஊவலமாக புறப்பட்டனர்.

இதன்போது, தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திறக்கு முன்பாகவைத்து பொலிஸாரும் கலகம் அடக்கும் பிரிவினரும் மக்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனால் மக்கள் மீண்டும் பிரதேச செயலகத்திற்கு முன்பாக தமது ஆர்ப்பாட்டத்தை தொடர்கின்றனர்.