25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

altஅரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்திருப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றையதினம் தீர்மானிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் பிரதான அமைப்பாளர் ரஜாப்தீன் இதனைத் தெரிவித்துள்ளார். உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட ரஜாப்தீன், மக்கள் குறித்து சிந்திக்காமல் அரசாங்கம் பாரிய அளவில் மின்சார கட்டணத்தை அதிகரித்துள்ளது.

இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் பெரும்பாலும் மக்களுக்கு பாதகமானதாகவே அமைந்துள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளையும் அரசாங்கம் பார்த்துக் கொண்டே இருக்கிறதே தவிர, அதற்கு எதிராக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வதாக தெரியவில்லை.

இந்த நிலையில் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்திருப்பது பிரயோசனமானது என்று நாம் எண்ணவில்லை.

இந்த நிலையில் இது தொடர்பில் ஆராய்வதற்காக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடம் இன்றைய தினம் ஒன்றுகூடவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.