25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஈழ போராட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கை ஆரம்பமாகுமாம்!

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய இந்த தேர்தல் நடத்தப்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற இனவாத அரசியல் கட்சியின் அரசியல்வாதிகள் அதன் மூலம் ஈழ போராட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையை ஆரம்பிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பார்களாம் என இலங்கையின்; இனவாத அரசியலவாதகளில்; ஒன்றான  வீரவங்ச உளறுகிறார்.. 

 

வட மாகாண சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளுக்கு சென்றால் 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் முக்கியமான அதிகாரங்களை பயன்படுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களை வடகிழக்கு மாகாணம் என்ற பெயரில் தனி மாகாணமாக மாற்றும் நடவடிக்கை உள்ளிட்ட பிரதான ஈழ நடவடிக்கைகளை அவர் செயற்படுத்துவார்கள் என இனவாத அரசியலின் சேற்றுக்குள் நின்று அலம்புது.

மன்னர்கால ஆட்சியில் வீடு கொழுத்தும் ராசாவிற்கு கொள்ளி தூக்கி கொடுக்கும் மந்திரிகள்; இருந்தது போல், இலங்கையின் இனவாத அரசியலின் இனவெறி நெருப்பால் தமிழர்தாயகத்தை சுட்டெரிக்கும் மகிந்த மா மன்னனுக்கு கொள்ளி தூக்கிக் கொடுக்கும் மந்திரியாக விமல் வீரவங்ச எனும் மந்திரி உள்ளார். இவர் போல் இன்னும் சிலதுகளும் உண்டு.

சமகால இனவாத அரசின் இனவாத நடவடிக்கைகளின் உண்மைத்தன்மை சாதாரண தமிழ்-சிங்கள மக்களை சென்றடைய இன்னும் வெகுநாட்கள் இல்லை. அப்போது அம்மக்கள் இனவாதத்தின் உண்மைநிலை கண்டறிந்து இந்த இனவாத அரசியல்வாதிகளை சுட்டெரிப்பார்கள்.