25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

altவவுனியா பேயாடிகூழாங்குளத்தில் அமைந்துள்ள பொது மக்களின் காணி இராணுவ தேவைகருத்தி சுவீகரிப்பதாக வவுனியா, மன்னார் மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் ந.திருஞானசம்பந்தர் அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளார்.

 

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1964ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க காணி எடுத்தல் திருத்த சட்டத்தின் படி திருத்தப்பட்டவாறான காணி கொள்ளும் சட்டத்தின் 2ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் காணி அமைச்சர் உத்திரவிட்டதன் பிரகாரம் பொது தேவைக்கென காணி சுவீகரிக்கப்படுவதாக பொது மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்படுகின்றது.

இதன் நிமிர்த்தம் வவுனியா மாவட்டத்தில் நொச்சிமோட்டை கிராமசேவகர் பிரிவில் பேயாடிகுழாங்குளம் கிராமத்தில் பேயாடிகுளம் என குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் 20ஏக்கர் காணி 56ஆவது படைப்பிரிவின் தலைமையத்திற்காக சுவீகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இக் காணிகளின் உரிமை கோருவோர் என நடராஜா, கேதீஸ்வரன், ஆர். நாகேஸ்வரன், எம். அமிர்தநாயகி, சண்முகநாதன், உமாபதி, எஸ். சிறிஸ்கந்தராசா, என்.சிறிஸ்கந்தராசா ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.