25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

alt71 இன் தோல்வி மாபெரும் தோல்வியென முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் துமிந்த நாகமுவ கூறினார். காலி தெளிகடை பிரதேசத்தில் நடைபெற்ற 71 ஏப்ரல் வீரர் நினைவு கூறலின்போது நேற்று உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.

"71இன் மாபெரும் தோல்வி குறித்த தாமதமான வாசிப்பு" என்ற தொனிப்பொருளில் முன்னிலை சோசலிசக் கட்சி நாடு பூராகவும் அனைத்து மாவட்டங்களிலும் ஏப்ரல் நினைவு கூறல் நிகழ்வுகளை நடாத்தியது. போராட்டத்தின் தீரம் மற்றும் தியாகத்தை உயர்த்திப் பிடிப்பதற்குப் பதிலாக அதன் மூலம் பயன் பெறத்தக்க மற்றும் பயன்தராத பக்கங்களை உரையாடலுக்கு எடுத்துக்கொண்டு போராட்டத்தின் அரசியல் அனுபவங்களை உள்ளீர்த்துக்கொள்ளும் நோக்கத்தோடு ஏப்ரல் வீரர்கள் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தன.

1971 இல் போராட்டத்தை நினைவு கூறும் முகமாக நாம் தெரிவு செய்த கோசம் மாபெரும் தோல்வி குறித்து தாமதமான வாசிப்பு என்ற தொனிப்பொருளின் கீழ் 71 போராட்டம் குறித்து நாங்கள் இதற்கு முன்னர் பல்வேறு பகுப்பாய்வுகளை கண்டிருக்கின்றோம். ஒரு புறம் இதனை முதலாளித்துவ வர்க்கம் CIA இன் பொறி என கூறியது அல்லது இது ரோகன விஜேவீரவின் தேவை அல்லது ஒரு குற்றச் செயல் என்று கூறியது அவ்வாறான போராட்டத்தின் ஒரு பக்கம் மாத்திரம் பேசப்பட்டது மறுபுறம் கடந்த 41 வருட காலமாக இந்தபோராட்டத்தின் வீரதீரத்தையும் தியாகத்தையும் மட்டுமே நாங்கள் பார்த்தோம். அந்த போராட்டத்தின் அரசியல் வாசிப்பை நாம் தவறவிட்டோம். ஆகவே 71 போராட்டத்தின் அரசியல் அனுபவங்கள் பேசப்படவேண்டுமென நாங்கள் நினைத்தோம். அதற்கான ஆரம்பத்திற்கு நல்ல சந்தர்ப்பம் என இதை நாங்கள் கருதுகின்றோம்.

மின்சார விளக்கை கண்டுபிடிக்க தோமஸ் அல்வா எடிசன் 1001 ஆய்வுகளை மேற்கொண்டார் அவற்றில் ஆயிரம் தோல்வி அடைந்தன ஒன்று வெற்றி பெற்றது. அது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேட்டார் நீங்கள் ஆயிரம் முறை தோற்றுவிட்டீர்கள் அல்லவா என்று அதற்கு தோமஸ் அல்வா எடிசன் இல்லை நான் 1001 ஆய்வுகளை மேற்கொண்டேன் மின்சார விளக்கை தயாரிக்க முடியாத 1000 முறைகளையும் தயாரிக்கக்கூடிய 01 முறையையும் கண்டுபிடித்தேன் இப்போது அது குறித்து வேறு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியதில்லை என கூறினார்.

நாங்கள் 71 போராட்டம் மற்றும் 87 89 போராட்டத்தை அப்படித்தான் காண்கின்றோம் அந்த போராட்டங்களை அப்படித்தான் வாசிக்க வேணடும். லெனின் கூறியிருக்கிறார் புரட்சி ஆயிரம் முறை தோற்றாலும் பிரச்சினை இல்லை இரண்டாவது முறை மீண்டும் முதலில் இருந்தே தொடங்குங்கள் என்று அதே போன்று ஆரம்பத்திலிருந்தே அணைத்தையும் நாங்கள் தொடங்க வேண்டியுள்ளது.

இலங்கையின் ஒடுக்கப்பட்ட மக்கள் அதற்கு முன்னர் ஒரு போதும் அரச அதிகாரத்திற்கு எதிராக எழுந்து நிற்கவில்லை. அவ்வாறு செய்தவர்களைப்பற்றிய அனுபவம் இருக்கவில்லை அவர்கள்தான் முதன் முதலாக அரச அதிகாரத்திற்கு எதிராக எழுந்து நின்றவர்கள் அங்கே வீரமும் நம்பிக்கையும் இருந்தது

"வரலாறு மனித செயற்பாடுகளைக் கொண்டே உருவாகிறது. முதலாளித்துவம் வரும் அதன் பின்னர் சோசலிசம் வரும் என்று மார்க்ஸ் கூறியதில்லை. சோசலிசத்தை உருவாக்குவது மனித செயற்பாடுகள் என்று மார்க்ஸ் கூறியிருக்கிறார். 71இன் பரம்பறை அதை அறிந்திருந்தது. அதற்காக போராடியது" என கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய துமிந்த நாகமுவ கூறினார்.

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

{jcomments on}