25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

altகிளிநொச்சி மாவட்டத்தில் 2012-2013ம் ஆண்டுகளுக்கான பெரும்போக நெற்செய்கையில் 27ஆயிரத்து 851ஏக்கர் வயல்நிலம் முழுவதுமாக அழிவடைந்துள்ள நிலையிலும் 8ஆயிரத்து 516 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் எந்தவிதமான நஷ்டஈடும் பெறாத நிலையில் தற்கொலை செய்துகொள்ளும் அலவுக்கு மனம் உடைந்திருப்பதாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மாவட்டத்தில் நெற்செய்கையில் அழிவுகளை சந்தித்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வலியுறுத்தி பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கு கடிதம் அனுப்பியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் குறித்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்

2012ம் ஆண்டு 2013ம் ஆண்டுகளுக்கான பெரும்போக நெற்செய்கை சுமார் 56ஆயிரத்து 193ஏக்கர் நிலப்பரப்பில் 15ஆயிரத்து 564குடும்பங்களைச் சேர்ந்த மக்களால் மேற்கொள்ளப்பட்டது. இதில் 27ஆயிரத்து 851ஏக்கர் நெற்செய்கை முழுவதுமாக அழிக்கப்பட்டது. இதனால் 8ஆயிரத்து 516குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மிகப் பாரதூரமான வாழ்வாதார நெருக்கடியினை எதிர்கொண்டிருக்கின்றார்கள்.

மேலும் இந்த அழிவு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மொத்த அழிவு தொடர்பான கணிப்பீட்டின் படி 13கோடியே 20லட்சத்து 12ஆயிரத்து 400ரூபா பெறுமதியிடப்பட்டுள்ளது.

இதேபோல் 2012ம் ஆண்டு சிறுபோகத்தின்போதும் 3ஆயிரத்து 906ஏக்கர் நெற்செய்கை நிலம் முழுவதுமாக அழிந்து போனது இதற்கும் இதுவரை எந்தவிதமான நஷ்டஈடும் வழங்கப்படவில்லை.

இத்தனையும் மிகமோசமான யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தறப்பாள்களுடனும்தகரங்களுடனும் சொந்த இடங்களுக்குத் திரும்பிய மக்கள் வங்கிகளில் கடன்களைப் பெற்றே மேற்கொண்ட நிலையில் அவ்வளவும் முழுவதுமாக அழிவடைந்த நிலையில் அந்த மக்கள் எவ்வாறு வங்கிகளில் பெற்ற கடன்களை செலுத்த முடியும்? வங்கிக் கடன்களை செலுத்த முடியாத நிலையில் பலர் தாம் தற்கொலைசெய்யும் மனோநிலையில் இருப்பதாக கண்ணீரோடு மனந்திறந்து கூறுகிறார்கள்.

இத்தனை நடந்திருந்தும் இன்றுவரை மாவட்ட மட்டத்தில் அழிவடைந்த விவசாய நெற்செய்கை விபரம் முழுமையாக கணிப்பிடப்படவில்லைஅந்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு இதுவரை அதிகாரிகள் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுத்திருக்கவில்லை. அரசாங்க அதிபரை தொடர்புகொண்டு கேட்டால் 2012ம் ஆண்டு சிறுபோக நெற்செய்கை அழிவுக்கான விபரங்கள் திரட்டப்பட்டுக் கொண்டிருப்பதாக கூறுகிறார்.

அதற்குள் ஒரு பெரும்போகம் நிறைவடைந்து அது அழிவடைந்து மீண்டும் சிறுபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆனால் அனுராதபுரம்பொலநறுவை போன்ற பிரதேசங்களில் இயற்கை அனர்த்தத்தினால் அழிவடைந்த செற்செய்கைகளுக்கான நஷ்டஈடு உடனடியாக அந்தந்த அரசாங்க அதிபர்களாலும்பொறுப்புள்ள அதிகாரிகளாலும் பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் மாவட்டத்தின் மொத்த செய்கையில் அரைவாசிக்கும் மேல்அழிவடைந்து மக்கள் வெறுங்கையுடன் நிற்கும் நிலையிலும் அந்த மக்களுக்கான நஷ்டஈடு இது வரையில் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

எனவே நஷ்டஈடு உடனடியாக வழங்க வலியுறுத்தி பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கும் அரச அதிபருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். இனிமேலாவது மக்களுடைய துயரங்களை துடப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.