25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

alt71ம் ஆண்டு புரட்சி செய்தஉயிர் நீத்த ஏப்ரல் வீரர்களை நினைவு கூறும் முகமாக கம்பஹா நகர சபை மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்கு கம்பஹா நகர சபைத்தலைவர் எரங்க சேனாநாயக்க மற்றும் உறுப்பிணர் குணவர்தன உள்ளிட்ட காடையர் குழு பலவந்தமாக நுழைந்து இடையூறு விளைவித்துள்ளனர்.

கம்பஹா நகர சபையில் ஏப்ரல் வீரர்கள் நினைவு தினத்தை நடத்த முடியாதெனக் கூறிய காடையர்கள் உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேறாவிட்டால் கொலை செய்வதாகக் கூறி கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்ளை அச்சுறுத்தியுள்ளனர். நினைவு கூறலுக்காக நகர சபை மண்டபத்தை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சி உறுப்பினர் ஒருவரையும் நகர சபைத்தலைவர் தாக்கியுள்ளார்.

இச்சம்பவத்தை படம்பிடித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரையும் நகர சபைத்தலைவர் உள்ளிட்ட காடையர்கள் தாக்கியதோடு அரசாங்க செய்தித் திணைக்களத்தால் ஊடக வியலாளருக்கு வழங்கப்பட்டிருந்த அடையாள அட்டையையும் புகைப்படக்கருவியையும் அபகரித்துச் சென்றுள்ளனர். தற்போது அவ்விடத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கூட்டம்  நடைபெற்று வருவதாக தெரியவருகிறது.