25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பொரலஸ்கமுவ, பெபிலியானவில் அமைந்துள்ள 'பெஷன் பக்' ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலை மீது இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

_

குழுக்களாக வந்தவர்கள் குறித்த களஞ்சியசாலைமீது கற்களை வீசி தாக்குதலை நடத்தியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலினால் குறித்த களஞ்சியசாலை  உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்த சில ஊழியர்களும் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தற்போது நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.