25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உண்ணாவிரதம் இருந்த லயோலா மாணவர்கள்

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளதை அடுத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து இந்தியா தனித் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் தமிழகம் முழுவதும் வகுப்புக்களைப் புறக்கணிப்பது, உண்ணாநோன்பு மேற்கொள்ளுவது, கொடும்பாவி எரிப்பது உள்ளிட்ட பல்வகை போராட்டங்களில் இறங்கியிருக்கின்றனர்.

 

சில இடங்களில் உண்ணா நோன்பிருக்கும் மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று கல்லூரிகள் அனைத்திற்கும் அரசு காலவரையற்ற விடுமுறை அறிவித்திருக்கிறது.

சில மாணவர் அமைப்புக்கள் எப்படியும் தங்கள் போராட்டம் தொடரும் என அறிவித்திருக்கின்றன.