25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மனித உரிமை பற்றிப் பேசுகின்ற போது எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுட்பட, சரத் பொன்சேக்கா போன்றோருக்கு பிடிப்பற்ற விசயமாகின்றது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் காரணமாகவே மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்துவதற்கு ஏதுவாக அமைந்தது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் சரணடைந்த பெண் மற்றும் ஆண் தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் மீது பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை இவற்றை வெறும் பொய்களாகவே கருத வேண்டும். இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாகவும் அவற்றை காத்திரமான முறையில் முறியடிக்க அரசாங்கம் தவறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் இந்த மெத்தனப் போக்கு சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படக் கூடிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதியிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளாது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையுடனான சந்திப்பை இலங்கைப் பிரதிநிதிகள் தவிர்த்துக் கொண்டனர்.

அத்துடன் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் முக்கிய நாடுகள் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடத்தப்படுவதனை எதிர்த்து வருகின்றது.

இதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையே தற்போதைய நிலைமைக்கு காரணம் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதை நான் யாரிடம் கேட்பேன்?''- தீர்க்கமான குரலில் கேட்கிறார் ஆனந்தி எழிலன்.

"இந்தியா வருகிறது, அமெரிக்காவின் பசிபிக் பிராந்தியத் தளபதி வரப்போகிறார். ஐ.நா-வின் மேற்பார்வையில் புலிகள் சரணடைவார்கள். மக்கள் விடுவிக்கப்பட்டு வீடுகளுக்குச் செல்வார்கள் என்ற பேச்சு மக்களிடம் பரவி ஒரு நம்பிக்கையாக விரிந்தே சரணடைய வைத்தார்கள். போராளிகளையும் தளபதிகளையும் வாகனங்களில் ஏற்றினார்கள். இதனைக் கண்ட சாட்சிகள் இருக்கின்றார்கள்."

சிலமாதங்களுக்கு முன்னர் இராணுவ விசாரணைக்குழு அளித்த அறிக்கையில் இராணுவம் ஜனநாயக விளிமங்களை மீறவில்லை என்று கோத்தாவும், இராணுவத்தளபதியும் அறிக்கைவிட்டிருந்தார்கள்.

சரத்பொன்சேக்கா, ரணில் போன்ற பிற்போக்குவாதிகளுடன் ஐக்கியப்பட்டுத்தான் ஜனநாயகத்தை மீட்கப்போவதாக தமிழ்கட்சிகளும், சிங்கள முற்போக்கு சக்திகளும் பிரகடனப்படுத்துகின்றார்கள்.