25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வடக்கு கிழக்கு பகுதிகளில் கைது செய்யப்பட்டுக் காணாமல் போன உறவுகளை மீட்டுத் தரக் கோரி வடக்கு மாகாணத்தில் காணாமல் போனோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்ட நிகழ்வு தற்பொழுது வவுனியாவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

காணாமல் போனோரின் உறவினர்கள் நூற்றுக்கணக்கானோருடன்,மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும்கலந்து கொண்டுள்ளனர்.

பொலிசாரினால் மக்கள் தடுத்து வைக்கப்பட்ட காரணத்தால் அதிகாலையே தமது போராட்டத்தை முன்னெடுத்த உறவுகள் ஊர்வலமாகச் சென்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் மகஜர் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.