25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

altதமிழ் அரசியல் கைது ஒருவர் தங்காலை சிறைச்சாலையில் கடுமையாகத் தாக்கப்பட்டு உள்ளார். மகசின் சிறைச்சாயில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த மட்டக்களப்பு வெல்லாவெளியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் என்பவரே இவ்வாறு கடுமையாகத் தாக்கப்பட்டு உள்ளார்.

 

அம்பாந்தோட்டை நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார். கொழும்பிற்கும் அம்பாந்தோட்டைக்கும் இடையிலான தூர இடவெளிகருதி முதல் நாளே தங்காலைச் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மறுநாள் காலை நீதிமன்றில் ஆஜர்படுத்துவது வழக்கம்.

இந்த நிலையில்  நேற்று இடம்பெற்ற விசாரணை முடிவில் மது போதையில் சென்ற தங்காலை சிறைக் காவலர்களால் நீ புலி எனக் கூறி இவர் மோசமாகத் தாக்கப்பட்டு உள்ளார். கடுமையான காயங்களுக்கு உள்ளான சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் என்ற இந்த தமிழ்ச் சிறைக் கைதி தற்போது மகசீன் சிறைச்சாலையில் அமைந்துள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.