25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாழ்ப்பாணத்தில் இன்று(07) அதிகாலை பத்திரிகை விநியோகப் பணியை முடக்கும் நோக்குடன் மீண்டும் ஒரு அராஜகம் அரங்கேறியிருக்கின்றது. தினக்குரல் பத்திரிகையின் விநியோகப் பணியாளர் தாக்கப்பட்டு பத்திரிகைகள் அவரது மோட்டார் சைக்கிளோடு வைத்து நடுவீதியில் எரியூட்டப்பட்டிருக்கின்றது.

யாழ். பருத்தித்துறை விநியோக மார்க்கத்தில் புத்தூர் பகுதியில் இன்று அதிகாலை 4மணியளவில்  இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது :

வழமைபோல குடாநாட்டிலுள்ள பத்திரிகைகள் விநியோகப் பணிகளுக்கான பணியாளர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சமயம் கோப்பாய்க்கும் நீர்வேலிக்கும் இடைப்பட்ட பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உதயன் பத்திரிகையின் விநியோகப் பணியாளரை தாக்கும் நோக்கத்துடன் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் அவரை வழி  மறித்த போதும்  நிற்காமல் ஓடிச் சென்ற வேளையில் தினக்குரல் பத்திரிகையின் பணியாளர் புத்தூர் பகுதியில் வழிமறிக்கப்பட்டு மோட்டார் சைக்கிளுடன் பத்திரிகைகள் தீயிடப்பட்டிருக்கின்றது.

குறித்த நபர் அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.