25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பௌத்த பிக்குமார் குழு ஒன்று புடவைக்கடை ஒன்றுக்குள் புக முயற்சித்த சம்பவத்தை பொலிஸார் தடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை கொழும்பின் புறநகர் மஹரகமவில் இடம்பெற்றுள்ளது. ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்ட பௌத்த பிக்குமாரே இந்தக் கடைக்குள் புகுவதற்கு முயற்சித்துள்ளனர். இதன் காரணமாக பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் குறித்தக்கடைக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

மஹரகமவில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான 'நோ லிமிட்' புடவைக் கடைக்கு செல்லும் வழியில் நின்றுகொண்டு குறித்த பௌத்த பிக்குமார் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டிருந்தனர். அத்துடன் அவர்கள் கடைக்குள் அத்துமீறிச் செல்வதற்கும் முயற்சித்தனர்.

இதனையடுத்து நிலைமையை கட்டுப்படுத்திய பொலிஸார் அவர்களை மேலும் முன்னேறவிடாது தடுத்தனர். இதேவேளை பௌத்த பிக்குகள்,முஸ்லிம்களுக்கு எதிரான சுலோகங்களை துண்டுப்பிரசுர விநியோகத்தின் போது தாங்கியிருந்தனர். அத்துடன், குறித்த கடையை மூடிவிடவேண்டும் என்றும் அவர்கள் கோசமெழுப்பினர்.