25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2012 நவம்பர் 30ம் திகதி யாழ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் மாணவர் தலைவர்கள் மற்றும் மாணவர் செயற்பாட்டாளர்களை அரசாங்க பாதுகாப்பு படையினர் கைது செய்ததோடு அவர்களில் நான்கு பேரை அதாவது பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்ஷனாத், தலைவர் வேலுதுரை பவானந்த், கலைப்பீட மாணவர் சங்கத்தின் தலைவர் கனகசுந்தரஸ்வாமி ஜனமேஜயன் மற்றும் விஞ்ஞானபீட மாணவர் சங்கத்தின் உறுப்பினர் சன்முகம் சொலமன் ஆகிய மாணவர்கள் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை.

சட்டத்திற்கு ஏற்ப அவர்கள் நீதியரசரின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவில்லை. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலும் எவ்வித குற்றமும் சுமத்தப்படாமல் பாதுகாப்பு செயலாளரின் உத்தரவிற்கமைய அவர்களை தடுத்து வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எந்தக் குற்றமும் சுமத்தப்படாவிட்டாலும் அவர்கள் பயங்கரவாதிகள் என அரசாங்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த தான்தோன்றித்தனமான நடவடிக்கையின் மூலம் அரசாங்கத்தின் நோக்கம் யாழ்பல்கலைக்கழக மாணவர் செயற்பாடுகள் மற்றும் பொதுவாக வடக்கில் நடைபெறும் அடக்கு முறைக்கு எதிரான மக்கள் செயற்பாட்டை அச்சுறுத்துவது மற்றும் அடக்கும் செயலாக இருப்பது நன்றாகத் தெரிகிறது. ஆகவே, இந்த 4 மாணவர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வற்புறுத்துவதோடு இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கான போராட்டத்திற்கு ஆதரவு தருவோம்.

உங்கள் கையொப்பம் இடுவதற்கு இங்கே அழுத்தவும்