25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புலிப்பூச்சாண்டியை உருவாக்கிக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துவதை அவதானிக்க முடிந்துள்ளது. தன்னால் அழிக்கப்பட்ட புலி இருப்பதாக காட்டிக் கொள்கின்றது. புலி பூச்சாண்டியை காட்டுவதும், பிரிவினைவாதம் இருப்பதாக பிரச்சாரம் செய்வதும், இனவாதத்தினை தளரவிடாது பாதுகாப்பதில் அரசு குறியாக இருக்கின்றது.

இதேவேளை எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டை சீர்குலைக்க புலி ஆதரவு அமைப்புக்கள் முயற்சிக்கின்றது என கருதும் அரசு. இவற்றிற்கு உடந்தையாக தற்போது பிரிட்டனில் தங்கியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, உலகத் தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்திரன் என்ற புலி ஆதரவாளரைச் இரகசியமாக சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பில் சில புலம்பெயர் செய்தி இணையங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் ஊடாக தானே உண்மையான சிங்கள மக்களின் பாதுகாலவன் என்ற மாயை தக்க வைக்கின்றது.


எதிர்க்கட்சிகள் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக பிரச்சாரப்படுத்துவதன் மூலம் தன்து ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை மக்கள் மறக்கவும், அரசியல் இருப்பை பாதுகாக்கவும் அரசாங்கம் முற்படுகின்றது.