25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

இலங்கையில் சீனாவின் மேலாதிக்கம் எல்லை மீறுமானால் தமிழர்களே வேண்டாம் என்று சொன்னாலும், வல்லரசு நாடுகள் இலங்கையைத் துண்டாடி தமிழ் ஈழம் உருவாக்குவார்கள். இவ்வாறு நாம் இயக்க நிறுவனர் ஜெகத் கஸ்பார் தெரிவித்தார்.

முள்ளிவாய்காலில் இடம்பெற்ற கொலைக்களுக்கு பொறுப்புக் கூறும் கடமை இவருக்கு உண்டு. இவர் எந்த உளவுப்படையின் பின்னால் நின்றார்? நிற்கின்றார்? இறுதிக் காலத்தில் நடேசனால் தொடர்பு கொள்ளப்பட்ட குறிப்பிட்ட நபர்களில் இவரும் ஒருவர். இந்த இந்திய அரச கைக்கூலி மறுபடியும் கனவான் அரசியலை முன்நிறுத்தும் முனைப்புடன் அரங்கிற்கு வருகின்றார். தமிழகத்தில் இருந்து எத்தனையோ அரசியல் கோமாளிகள் ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுப்பாகக் கூறி தமிழக இளைஞர்களிடையே வெறும் உணர்ச்சியை தூண்டிக் கொண்டிருக்கின்ற வேளையில் போட்டியாக மீண்டும் நுளைகின்றார் இந்த ஜெகத் கஸ்பார்.

முன்னரும் "முள்ளிவாய்க்கால் கொலைகளின் தொகையை அதிகரிக்கும் போது தமிழீழம் கிடைக்கும்" என்று ஆலோசனை வழங்கியது போலவே. இன்று சீனப் பிரசன்னம் தமிழீழத்தை பெற்றுத்தரும் என்று வெற்று நம்பிக்கையை ஊட்டுகின்றார்.

இவை மாத்திரம் அல்ல, உதவி என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தமிழ் பகுதிகளுக்கு அனுப்பும் ஆவலை வெளிப்படுத்தும் இந்த பேர்வழிகள் புலம்பெயர்ந்த தேசத்தில் உள்ளவர்களை கனவான் (லொபி) அரசியலில் நம்பிக்கை வைக்கும்படி கருத்துக் கூறுகின்றார்கள். மேற்கு தேசங்கள் அனைத்துக் காலங்களிலும் நமது நலன் கொண்டு தான் செயற்பட்டனர் செயற்படும்.

ஆனால் இலங்கைத் தமிழ் மக்களின் போராட்டத்தின் வெற்றி என்பது அனைத்து தேசிய இனங்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்தினால் சாத்தியமாகும். ஐக்கியப்பட்ட போராட்டத்தை சிதைப்பதற்கு இந்த மாதரியான பேர்வழிகள் ஊடாக அன்னிய உளவு நிறுவனங்கள் செயற்படுகின்றன.

அன்னியர்கள் எமது நாட்டில் கடை விரிப்பது தமது லாபங்கருதியே அன்றி எமது உரிமைகளை பெற்றுத்தரவல்ல. எரிகின்ற வீட்டில் கூரையினை பிரித்துக் கொண்டு செல்வது தான் அன்னிய முதலாளித்துவ ஆட்சியாளர்களினதும் அவர்களது கைக்கூலிகளினதும் வேலை என்பதனை நினைவில் வைத்திருப்போம்.