25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

altஆட்சியாளர்கள் இனவாதத்தை பயன்படுத்துவது தமது குற்றச் செயல்களை மூடி மறைக்கவே எனவும் அது ஒரு அரசியல் திட்டம் எனவும் முன்னிலை சோஷலிச கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜயகொட இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் தனியார் ஊழியர்கள் தோட்ட தொழிலாளர்கள் போன்ற பல தரப்பினர் சம்பள உயர்வை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் எவ்வாறு அரசியலை கொண்டு செல்வது? இனவாதம், அச்சுறுத்தல் அரசியல், மோசடி மற்றும் ஏமாற்றம் என்பவற்றை இதற்கு பயன்படுத்துகின்றனர். இனவாதத்தை பிரதானமாக கொண்டுள்ளனர்.

2009யுத்தத்தம் முடிவதற்கு முன் மக்களிடம் இருந்த மனநிலையை தொடர்ந்தும் கொண்டு செல்லல், பகைமையை உண்டாக்குதல் போன்றவற்றை அரசு செயற்படுத்தி வருகிறது. 2009ஆண் ஆண்டிற்கு பின்னர் நாட்டில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் அனைத்தையும் அரசு ஏற்படுத்தவில்லை.

யாழ் மாணவர்களை அரசு கைது செய்து புனர்வாழ்விற்கு அனுப்பியுள்ளது. நாளை களனி, ஜயவர்தனபுர மாணவர்களை கைது செய்தும் புனர்வாழ்விற்கு அனுப்பும்.

தமிழ் மக்களுக்கு எதிராக இனவாதம் உள்ள நிலையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் இனவாதம் தூண்டி விடப்பட்டுள்ளது.

எம்பிலிப்பிட்டியவில் இரு முஸ்லிம்கள் தாக்கப்பட்டு மறுநாள் பொதுபல சேனா என்ற அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த சம்பவத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என அரசு கூறியுள்ளது. ஆனால் இதன் பின்னணியில் உள்ளூராட்சி அரசியல்வாதிகள் உள்ளனர் என்றார்