25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுன்னாகம் கந்தரோடை ஐயநார் வீதி வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் மரணமான இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இவ்வாறு மரணமான பெண் யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீட முதலாமாண்டு மாணவியான 21வயதுடைய நடராசா கியானி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வீட்டிலிருந்து தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் வெளியே சென்ற போது குறித்த பெண் படித்துக் கொண்டிருந்ததாகவும் பெற்றோர் வீடு திரும்பிய வேளை, அப்பெண் சடலமாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த பெண்ணின் கழுத்தில் படுக்கை விரிப்பின் ஒரு பகுதி சுத்தப்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.இந்த சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவிகள் மூவரை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.யாழில் உள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அலுவலகத்துக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வருமாறு இம்மாணவிகளுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அழைப்பு விடுக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் யாழ். பல்கலைக்கழக மாணவிகள் விடுதி சங்கத் தலைவி என்றும் ஏனைய இருவரும் மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.