25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாழ் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்களை விடுதலை செய்யக்கோரி இன்றைய தினம் கிளிநொச்சி பிரதேசசபைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உடனே விடுதலை செய், இராணுவமே வெளியேறு, போன்ற கோசங்கள், பாதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள்,புதிய ஜனநாயக மாக்சிஸ் லெனின் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். கவனயீர்ப்பு போராட்டத்தை பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்வதற்கான, ஆறு கட்சிகள் கூட்டமைப்பு இப்போராட்டத்தை நடத்தி யதுமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இப் போராட்டத்திற்கு எதிராக ஒரு குழுவினர் ஓர் சிறு ஆப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர் . இவர்கள் கிளிநொச்சியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சின் அலுவலக ஊழியர்களும், அக்கட்சியிடம் உதவி பெறும் சிலருமே, எனத் தகவல்கள் தெரிவிகின்றன. இதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டார ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மருத்துவ பீட மாணவர்கள் ஐவர் மற்றும் விஞ்ஞான பீட மாணவர்கள் இருவருமே நேற்று இரவு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சஞ்ஜீவ பண்டார தெரிவித்தார். இம் மாணவர்கள் பொலிஸாரின் அறிவுறுத்தல்படி பல்கலைக்கழக பீடாதிபதிகள் மற்றும் பெற்றோரினால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். வவுனியா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் இவர்களிற்கு முன்னதாக கைது செய்யப்பட்டுள்ள ஏனைய நால்வர் தொடர்ந்தும் வவுனியா பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இன்று லலித் மற்றும் குகன் கடத்தப்பட்டு ஒருவருடமாகிறது. இதை கண்டித்தும், அவர்களின் விடுதலை கோரியும், இன்று யாழில் நடக்கும் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் பாரிய போராட்டம் திங்கட்கிழமை 10.12.2012, அன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பில் நடைபெறுகிறது. இதை மக்கள் போராட்ட இயக்கம் ஒழுங்கு செய்துள்ளது. அனைத்து மக்கள் நலம் சார்ந்த சக்திகள், இனஒடுக்கு முறைக்கு எதிரானோர், ஜனநாயகப் போராளிகள் என அனைவரையும் இந்த ஆர்பாட்டத்தில் பங்குகொள்ளுமாறு அழைக்கிறது, மக்கள் போராட்ட இயக்கம்.

மேற் கூறியபடி, இந்த ஆர்பாட்டத்தில் யாழ்ப்பாணத்தில் மற்றும் தமிழ் பிரதேசங்களில் அரசினால் நடத்தப்படும் இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும், அனைத்து அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும், குறிப்பாக கைது செய்யப்பட்டுள்ள யாழ்பாண பல்கலை கழக மாணவர்களை விடுவிக்க கோரியும் கோசங்கள், கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என மக்கள் போராட்ட இயக்கம் அறிவித்துள்ளது.