25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

altயாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டார தெரிவித்தார்.

மருத்துவ பீட மாணவர்கள் ஐவர் மற்றும் விஞ்ஞான பீட மாணவர்கள் இருவருமே நேற்று இரவு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சஞ்ஜீவ பண்டார தெரிவித்தார்.

 

இம் மாணவர்கள் பொலிஸாரின் அறிவுறுத்தல்படி பல்கலைக்கழக பீடாதிபதிகள் மற்றும் பெற்றோரினால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.வவுனியா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் இவர்களிற்கு முன்னதாக கைது செய்யப்பட்டுள்ள ஏனைய நான்கு மாணவர்கள் தொடர்ந்தும் வவுனியா பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.