25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தோழர்கள் லலித் மற்றும் குகன் கடத்தப்பட்டு ஒருவருடமாகிறது. இதை கண்டித்தும், அவர்களின் விடுதலை கோரியும், இன்று யாழில் நடக்கும் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் பாரிய போராட்டம் திங்கட்கிழமை 10.12.2012, அன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பில் நடைபெறுகிறது. இதை மக்கள் போராட்ட இயக்கம் ஒழுங்கு செய்துள்ளது. அனைத்து மக்கள் நலம் சார்ந்த சக்திகள், இனஒடுக்கு முறைக்கு எதிரானோர், ஜனநாயகப் போராளிகள் என அனைவரையும் இந்த ஆர்பாட்டத்தில் பங்குகொள்ளுமாறு அழைக்கிறது, மக்கள் போராட்ட இயக்கம்.

மேற் கூறியபடி, இந்த ஆர்பாட்டத்தில் யாழ்ப்பாணத்தில் மற்றும் தமிழ் பிரதேசங்களில் அரசினால் நடத்தப்படும் இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும், அனைத்து அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும், குறிப்பாக கைது செய்யப்பட்டுள்ள யாழ்பாண பல்கலைகழக மாணவர்களை விடுவிக்க கோரியும் கோசங்கள், கோரிக்கைகள் முன்வைக்கப்படும். அனைவரும் வருக!. இந்த தகவலை பரப்புமாறு அனைத்து ஜனநாயக சக்திகளையும் கேட்டுக்கொள்கிறது, மக்கள் போராட்ட இயக்கம்.