25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அண்மையில் மட்டக்களப்பு கல்முனை வீதியில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இராணுவத்தினர் தமிழ் மக்களை  குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து  அவர்களின் வீட்டு சுவர்களில் தொங்க விட்டிருப்பதுடன் இன்னொரு பிரதியை தம்முடன் எடுத்துச் சென்றும் உள்ளனர்.

இந்த புகைப்படங்களுக்கு பாதுகாப்பு படையினரால் விசேட இலக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்காக GPRS தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே போன்று யாழ்ப்பாணத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலும் புகைப்படம் எடுக்கும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதால் மக்கள் பீதியுடன் இருப்பதாக அறியக்கிடைக்கின்றது.

நீதி மன்றத்தினால் புகைப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டிந்தும். அதனையும் மீறியே இராணுவத்தினர் புகைப்படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.