25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் மாணவர்களின் கைது, பெண் மாணவர்களின் விடுதிக்குள் இராணுவத்தினர் நுழைந்தமை ஆகியவற்றை கண்டித்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பகல் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

பேராதனை கலஹா சந்தியில் ஒன்று கூடிய மாணவ, மாணவிகள் மற்றும் பௌத்த பிக்குகள் உட்பட்ட நூற்றுக் கணக்கான மாணவர்கள் சுலோகங்களை ஏந்தி கோசமிட்டு தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர். “வையாதே வையாதே எம் மீது கை வையாதே” “பல்கலைக்கழகங்களுக்கு உள்ளே இராணுவம் செல்வதை உடன் நிறுத்து”  “கைது செய்த மாணவர்களை உடன் விடுதலை செய்” போன்ற கோசங்களை எழுப்பி ஊர்வலமாக சென்றனர். இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் இன்னும் தொடரவுள்ளன.