25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நேற்று நாம் செய்தி வெளியிட்டபடி பரமலிங்கம் தர்ஷானந், கணேஷமூர்த்தி சுதர்ஷன், கனகசபாபதி ஜெயன், சண்முகம் சொலமன் ஆகிய நான்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் வவுனியாவில் புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கபட்டுள்ளனர். மாணவர்களில் நிலை பற்றி எந்தவித தகவல்களும் வெளிவராத நிலையில், முன்னிலை சோஷலிச கட்சியின் பாராளுமன்றஉறுப்பினர் திரு.அஜித் குமார, நேற்று மாலை01.12.2012, யாழ். போலிஸ் அத்தியட்சகரை தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்ட மாணவர்களைப் பற்றி விசாரித்தார். யாழ் பொலிஸ் அத்தியட்சகர், பாராளுமன்ற உறுப்பினர் திரு. அஜித் குமாரவுக்கு பதிலளிக்கையில், மேற்படி மாணவர்களை, CID புலனாய்வுப்பிரிவு கைது செய்ததாகவும், அதற்கு போலீஸ் உதவி புரிந்ததாகவும், கூறியதுடன் தற்போது அவர்கள் புலனாவுப்பிரிவினரால் வவுனியாவில் வைத்து விசாரிக்கப்படுவதாக தெரிவித்தார்.

இதேவேளை நேற்று, BBC மற்றும் சில ஊடகங்கள், கைது செய்யப்ப்பட்ட மாணவர்கள் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்ரீ-டெலோ அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதால் தான் கைது செய்யப்பட்டதாகவும் செய்தி வெளியிடிருந்தன. ஆனால், நாம் வெளியிட்ட செய்தியை ஒட்டிய தகவல்களே, திரு. இரா.சம்பந்தன் சில மணி நேரங்களுக்கு முன் போலீஸ் மா அதிபரை தொடர்பு தொடர்பு கொண்டபோது வெளிவந்துள்ளது .

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பல்கலை மாணவர்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருடம் தொலைபேசி மூலம் த.தே.கூ தலைவர் கேட்டபோது ஆரம்பத்தில் கைது தொடர்பில் தெரியாது எனவும் தனக்கு 5 நிமிடங்கள் தரும்படியும் கேட்டிருந்தார். அதனையடுத்து பொலிஸ்மா அதிபர் தெரிவிக்கையில், பொலிஸாரினால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டமைக்கான பற்றுச்சீட்டுகள் மாணவர்களின் பெற்றோரிடம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மாணவர்களை பல்கலைக்கழக துணைவேந்தர், பதில் துணைவேந்தர் மற்றும் பெற்றோர்கள் பார்வையிட முடியும், என சம்பந்தனிடம் தெரிவித்தார் .

இதேவேளை, முகாமைத்துவ பீட மாணவர் ஒன்றியத்தலைவரான பரந்தாமன் சபேஸ்குமாரையும் கைது செய்தவற்காக அவரது வீட்டிற்கு இன்று அதிகாலை 3.30 மணியளவில் பொலிஸார் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தெற்கில் இருந்து வரும் தகவல்களின் படி, யாழ் மாணவர்களுக்காக அதரவு தெரிவித்து போராட்டத்தை ஏற்பாடு செய்யும் சிங்கள மாணவர் தலைவர்கள் தொடர்ந்தும் மிரட்டபடுகின்றனர்.ஆர்ப்பாட்டத்திட்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த ரஜரட்ட பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவருக்கு தொலைபேசி மிரட்டல் விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளளர்.