28
Fri, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பரமலிங்கம் தர்ஷானந், கணேஷமூர்த்தி சுதர்ஷன், கனகசபாபதி ஜெயன், சண்முகம் சொலமன் ஆகிய நான்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (30.12.2012 ) கைது செய்யப்பட்டனர். இவர்கள் சம்பந்தமாக எந்தவித தகவல்களும் வெளிவராத நிலையில், முன்னிலை சோஷலிச கட்சியின் பாராளுமன்றஉறுப்பினர் திரு.அஜித் குமார, இன்று மாலை யாழ். போலிஸ் அத்தியட்சகரை தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்ட மாணவர்களைப் பற்றி விசாரித்தார் . 

யாழ் - போலிஸ் அத்தியட்சகர், பாராளுமன்ற உறுப்பினர் திரு. அஜித் குமாரவுக்கு பதிலளிக்கையில், மேற்படி மாணவர்களை, CID புலனாய்வுப் பிரிவு கைது செய்ததாகவும், அதற்கு போலீஸ் உதவி புரிந்ததாகவும், கூறியதுடன் தற்போது அவர்கள் புலனாவுப்பிரிவினரால் வவுனியாவில் வைத்து விசாரிக்கப்படுவதாக தெரிவித்தார். 

யாழ் -பல்கலைகழகத்தில் தீவிர அரசியல் செயற்பாடுகளை கைது செய்யப்பட்ட மாணவர்கள் மேற்கொள்ளுவதனால், அவர்களுக்கும் புலிகளுக்கும் இடையில் ஏதாவது தொடர்பு உண்டா என அறிந்து கொள்ளவே, மாணவர்கள் தடுத்து வைத்து புலனாவுத்துறையினால் விசாரிக்கப்படுவதாக யாழ் போலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், பயங்கரவாத தடுப்பு சடத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதனால், 72 மணித்தியாலம் நீதி மன்றத்தின் அனுமதி இல்லாமல் விசாரிக்க புலனாவுப் பிரிவினருக்கு அனுமதியுள்ளது எனவும் போலிஸ் அத்தியட்சகர், முன்னிலை சோஷலிச கட்சின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. அஜித் குமாரவுக்கு தெரிவித்தார்