25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி!! மாணவி காயம் ஐவர் கைது!!!

altநேற்று இராணுவத்தினர் யாழ். பல்லலைக்கழக பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவிகளை மிரட்டியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலை மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளை மாணவர்கள் ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை மாணவர்களைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் தாக்கியும் உள்ளனர்

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதை அடுத்து மாணவர்களைக் கலைப்பதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் தடியடி நடத்தியுள்ளனர். இதனால் மாணவர்களில் பலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

சுமார் 200பேர் அடங்கிய பொலிஸாரும் இராணுவத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கலைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட போதே இந்த கலவரம் இடம்பெற்றுள்ளது.

நேற்று மாவீரர் தினத்தை யாழ்.பல்கலைக்களக மாணவர்கள் இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியிலும் அனுஷ்டித்த நிலையில் அவர்களை பழிவாங்கும் நோக்குடன் இராணுவத்தினரும்,பொலிஸாரும் இன்று இவ்வாறு நடந்துகொண்டுள்ளனளர்.

-www.lankaviews.com/ta