25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

altஉலகில் மிகவும் பாதுகாப்பான இடங்களில் சிறைச்சாலையும் ஒன்று என்பார்கள். எதிரிகளிடமிருந்து உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்களில் பலர் ஏதேனும் ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு சிறையில் போய் அமர்ந்து கொள்வது சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் நடப்பதுதான்.

 

ஆனால் வெலிக்கடை சிறைச்சாலையைப் பொறுத்தவரையில் இது சாத்தியமான ஒன்று அல்ல என்பதைத்தான் கடந்த வெள்ளிக்கிழமை(09)இடம்பெற்ற கலவரம் நமக்கு உணர்த்தி நிற்கிறது.

altஎது உயிர் வாழ்வதற்குப் பாதுகாப்பான இடம் என்று நாம் கருதினோமோ அது இன்று உயிர்ப்பலி எடுக்கின்ற கொலைக்களமாக மாற்றம் கண்டிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை(09) கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை ஒரு போர்க்களமாகவே காட்சியளித்தது. கூரையின் மீது கைதிகள் ஏறிநின்று ஆயுதங்களைத் தூக்கிக் காட்டியபோதும் முச்சகர வண்டி ஒன்றில் கைதிகள் தப்பிச் செல்ல முயன்றபோது நூற்றுக் கணக்கான படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களைக் கொன்றபோதும் சினிமாப்பட ஷூட்டிங் நடப்பது போலவே இருந்தன நிகழ்வுகள் அனைத்தும். ஆனால் சில மணி நேரங்களுக்குள் எல்லாமே நிஜமாகவே நடந்து முடிந்துவிட்டன.

altவெலிக்கடை சிறைச்சாலைக் கலவரத்தைத் தொடர்ந்து படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 27கைதிகள் உயிரிழந்திருக்கிறார்கள். சுமார் 40க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்கள். காயமடைந்தோரில் கைதிகளும் சிறைக் காவலர்களும் பொலிசாரும் இராணுவத்தினரும் அடங்குகின்றனர்.

சுமார் 3500க்கும் மேற்பட்ட கைதிகளைக் கொண்டுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலவரத்தினைப் பயன்படுத்தி ஐந்து கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். அத்துடன் 5ஆயுதங்களும் காணாமல்போயுள்ளன.

alt

 

alt

 

alt

 

alt

நன்றி: பு கைப்படங்கள் srilankaxnews