25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசத்தில் புதிய மதுபான சாலை திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டு இன்று சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக சுலோகங்களை தாங்கியவாறு வருகை தந்த ஒரு சில ஆர்ப்பாட்டக்காரர்கள் புதிய மதுபான சாலை திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய மதுபான சாலை திறப்பதற்கு அனுமதி வழங்கவும், மதுபான சாலை திறப்பதற்கு ஆட்சேபனை இல்லை, எதிர்ப்பு இல்லை, ஊர்ப்பகுதி இல்லை என்பன போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை இவர்கள் தாங்கி நின்றனர்.

அதேவேளை, மண்முனைப் பற்று பிரதேசத்தில் புதிய மதுபான சாலை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் எனக் கேட்டு மண்முனைப்பற்று பிரதேசத்திலுள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலக கச்சேரிக்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.