25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

altஉழைக்கும் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க இன்று மாலை 4மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற இருப்பதாக தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

அரச மற்றும் தனியார் துறைகளின் அனைத்து ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும் படியும் நாளாந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்த கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதே இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கமாகும்.

அதே போன்று தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் மற்றும் "MAN POWER" ற்கு பதிலாக அனைவருக்கும் நிரந்தர தொழிலை பெற்றுக் கொடுக்குமாறும் வற்புறுத்தப்படும் என்றுள்ளது.

"சந்தோசமில்லை சம்பளமில்லை"

"ஓய்வுமில்லை  வாழ்க்கையுமில்லை"

என்ற தொனிப் பொருளில் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் அனைத்து வேலைத் தளங்களிலும் அறிவுறுத்தும் வேலைத்திட்டம் ஒன்று செயற்பட்டு வருவதாக தொழிலாளர் போராட்ட இயக்கம் மேலும் தெரிவித்துள்ளது.

-http://lankaviews.com/ta