28
Fri, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

altகடந்த 19ம் திகதி கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ பண்டாரவை இன்று பினையில்  விடுதலை செய்யுமாறு  கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றாம் உத்தரவிட்டது. அனைத்து பல்கலைக் கழக மானவர் ஒன்றியத்தினால்  எதிர்வரும் 28ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவதாயிருந்தால் பிணை வழங்குவதை தாம் எதிர்க்கமாட்டோம் என போலிஸார் கூறிய போதிலும்  நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது.
 
எப்படியிருந்தாலும் சஞ்சீவ பண்டாரவின் சார்ப்பில் ஆஜராகிய வழக்கறிஞர்கள் எந்த நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ள மறுத்ததனர். அதற்கான காரணங்களையும் விளக்கிக் கூறினர். வாதங்களை கவனத்திலெடுத்த நீதிபதி சஞ்சீவ பண்டாரவை ஒரு லட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்தார் அக்டோபர 2ம் திகதிக்கு வழக்கு விசாரணை பின்போடப்பட்டது.