25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

திருநெல்வேலி: கூடங்குளத்தில் யுரேனியம் நிரப்பும் பணியை நிறுத்தக்கோரி இன்று 2 வது நாளாக நடந்த முற்றுகை போராட்டத்தில் களம் இறஙகி போராடிய தூத்துக்குடி மாவட்டம் மனப்பாடு கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிசாமி என்ற மீனவப் போராளியை செல்வியின் அரச பாதுகாப்பு இயந்திரம் படுகொலை செய்துள்ளது.

கூடங்குளத்தில் யுரேனியம் நிரப்பும் பணியை நிறுத்தக்கோரிய உள்ளூர் மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பையும் மீறி யுரேனியம் நிரப்பும் அனுமதியை நீதிமன்றம் வழங்கியது. இந்நிலையில் மக்கள் அணுமின்நிலையத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்து  ஆயிரக்கணக்கில் மக்கள் இடிந்தகரையிலிருந்து கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு கடற்கரை வழியாக நேற்று சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்த போலீஸ் அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியும் முயன்றனர். இதற்கு  5000த்திற்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்! நேற்றிரவு முழுவதும் கடற்கரையில்  தங்கிய மக்கள் இன்றும் தமது போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்நிலையில் இன்று காலை போராட்டக்காரர்கள்மீது திடீர் தாக்கதலில் ஈடுபட்டனர்!  கண்ணீர் குண்டுகளை வீசி தடியடி நடத்தியது. கையில் கிடைத்தவர்களை கொடூரமாக தாக்கி கைதும் செய்திருக்கிறது. கடலுக்குள் ஓடிய மக்களை மீண்டும் கரை திரும்பா வண்ணம் கடல் நீருக்குள் வைத்து தாக்கினர். படையினர் இடிந்தகரைக்கு உள்ளேயும் நுழைந்து போராட்டக்காரர்களின் பந்தலைக் கைப்பற்றியதுடன் தேவாலயத்துக்கு உள்ளேயும் நுழைந்து.


ஆக்கிரமிப்பு படை போல ஊர் முழுவதையும்  ஆக்கிரமித்தனர்.  படையினரின் கொடுந்தாக்கதல்களால் மக்கள் சிதறியோடினர்.  பலர் படகுகளில் தாவி கடலுக்குள்ளால் சென்றனர். பெண்கள் பெண் குழந்தைகள் திசைக்கொருவராக சிதறியோடினர். பலருக்கு என்ன நேர்ந்த்தென்று தெரியவில்லை.

மேலும் கூட்டதுத்துக்கு உள்ளே ஊடுறுவியிருந்த அதிரடிப்டையினர் மக்களை தாக்கத் தொடங்கினர். இந்நிலையில் ஓரிரு இடங்களில் மக்களும் திருப்பித்தாக்கினர். இதில் பல பொலீசார் காயமடைந்தனர். மேலும் ஆத்திரமடைந்த மக்கள் பொலிசாரை சில மணிநேரம் பணயக்கைதிகளாக்கி வைத்திருந்த சம்பவங்களும் இடம்பெற்றன. இதில் ஆத்திரமடைந்த படையினரின் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர். இத்தாக்குதலின்போதே இம் மீனவப் போராளி சுட்டுக்கொல்லப்பட்டார்!

கூடங்குளத்தில் மக்கள் நடாத்தியது ஓர் ஜனநாயகப்போராட்டமே!. அதுவும் மக்களுக்கும் உயிரினங்களுக்கும் சுற்றுப்புறச்சூழலுக்கும் நாசம் விளைவிக்கும் அணு உலையை மூடக்கோரியே! இதற்கு இப்படியொரு கொலைவெறி கொண்டுதான் தன் எண்ணத்தை நிறைவேற்றியுள்ளது செல்வியின் பாசிச அரசு!

இன்றைய உலகமயமயமாதலில் உலக ஆளும் வர்க்கம் தன் சுகபோகத்திற்காக உலகில் எவ்வழிவையையும் செய்யத் தயங்காது, சமூகப்பொறுப்புள்ளவர்கள் அதன்பாற்பட்ட விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளயும் புறந்தள்ளியே வருகின்றது. மக்களை உயிரினங்களை சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்பதல்ல இவர்கள் நோக்கம். ஆக தம் ஆளும் வ்ர்க்க சுகபோகமே இவர்கள் நோக்கம்!

இதில் தமிழனை தமிழன் ஆள்வதால் தமிழ்மக்கள் பிரச்சினைகள் தீரும் என்போருக்கும் இதை சமர்ப்பணமாக்குகின்றோம்!

இனமல்ல! எந்த வர்க்கம் அதிகாரத்தில் உள்ளதோ அது தன் வர்க்கத்தை காக்கும்!

அதனால்தான் ஜெயலலிதாவின் துப்பாக்கிக் குழலில் இருந்து பிறக்கும், துப்பாக்கிக் குண்டுகள் சாதாரண தமிழ் ஏழை எளிய மக்களை அழிக்கின்றது!