25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times





வவுனியா சிறைச்சாலையில் அரசியல் கைதிகளின் மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலால் தில்ருக்சன் எனும் அரசியல் கைதியும் இறந்துள்ளார். தில்ருக்சன், வவுனியா சிறைச்சாலைத் தாக்குதல்களால் உயிரிழந்த இரண்டாமவராவார். இச் சிறைச்சாலைப்படுகொலையைக் கண்டித்து யாழ்நகரில் பேருந்து நிலையத்துக்கு முன்னால்  கடந்த 15-08-2012 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.


தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் அழைப்பின் பெயரிலான இக் கவனயீர்ப்புப் போரட்டத்தில் ஏனைய பல கட்சிகளுடன் புதிய – ஜனநாயக மார்க்சிச – லெனினிச கட்சியும் பங்குபற்றியிருந்தது.