25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்து  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தில்ரூக்ஷன் என்ற இளைஞர் நேற்றிரவு 10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.!

வவுனியா சிறைச்சாலையில் இருந்து கடந்த மாதம் அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டு பின்னர் அங்கு வைத்து சிறைச்சாலை அதிகாரிகளால் தாக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி இன்று காலை மரணமானார்.

குறித்த அரசியல் கைதி வவுனியா சிறைச்சாலையில் மோதல் ஏற்பட்ட தினத்திலிருந்தே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக மஹர மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.!

அரச நிகழ்ச்சி நிரலில் தமிழ்மக்கள் திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள்ளும், கொடுஞ்சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளார்கள். திறந்தவெளியில் ராணுவத்தின் சப்பாத்துக் காலடிகளுக்குள் மிதிபட்டும்இ பூட்டிய சிறைகளுக்குள்; சிறைக்கம்பி கொண்டும் அடித்துதைத்து கொல்கின்றனர்.

இதந்தரு மனையி னீங்கி
    இடர்மிகு சிறைப்பட் டாலும்
பதந்திரு விரண்டுமாறி
    பழிமிகுத் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி யின்னல்
    விளைந்தெனை யழித்திட்டாலும்
சுதந்திர தேவி! நின்னைத்
    தொழுதிட மறக்கி லேனே!

என்ற பாரதியின் வரிகள் கொண்ட உங்கள் ஒவ்வொருவரின் வீரமரணமும், எம் சுதந்திர சுயநிர்ணய உரிமைப்போரின் உரமாகும்! விரைவில் அதை வலுவாக்கும்.

--அகிலன் 8/8/2012