25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைச் செய்யக்கோரியும், யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரியும் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

முன்னிலை சோசலிக் கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டமானது கொழும்பு லிப்படன் சுற்றுவட்டமருகில் இன்று பிற்பகல் 2.30மணியிளவில் ஆரம்பமானது. இதன்போது சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளை விடுதலைச் செய்யக்கோரியும், லலித் மற்றும் குகன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரியும் கோஷமெழுப்பப்பட்டது.

 

 

அத்துடன் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சரான நிமல் சிறிபால டி சில்வா ஒரு மாதக்காலத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்த போதிலும் அது பொய்யாகியுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டனர்.

 

 

'யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகியோரை உடன் விடுதலை செய்'

 

 

'ஒரு மாதத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளை விடுதலை செய்'

 

 

'பொய் வேண்டாம் எக்னலிகொடவை விடுதலை செய்'

 

 

'கொடுத்த வாக்குறுதிகளை உடன் நிறைவேற்று – அரசியல் கைதிகளை விடுதலை செய்'

 

 

போன்ற வசனங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

 

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னிலை சோஷசலிக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் புபுது ஜாகொட கருத்து தெரிவிக்கையில்.

 

 

கடந்த மாதம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 

 

இதன்போது கடந்த மாதம் 24ம் திகதி அரசதரப்பினர் அவர்களிடம் சென்று நீண்டகாலமாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை அல்லது அவர்கள் மீதான வழக்கு தாக்கல் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இவை ஒரு மாதகாலத்திற்குள் நிறைவேற்றப்படும் எனவும் உறுதியளித்திருந்தனர்.

 

 

இவ்வாறு அரசதரப்பினர் உறுதியளித்த ஒரு மாதம் நிறைவடைய இன்னும் ஒரு சில தினங்களே எஞ்சியுள்ளன. எனினும் அவர்கள் வழங்கிய உறுதிமொழியினை நிறைவேற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையினையும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை.

 

 

இந்நிலையில் ஒரு சிலர் 15, 20வருடங்களாக அரசியல் கைதிகளாக சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளை ஏமாற்றி அவர்களிடம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அவர்களை மேலும் சிரமத்திற்குள்ளாக்கும் வகையில் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது.

 

 

அதுமாத்திரமின்றி சிறைச்சாலைக்குள் தமிழ் அரசியல் கைதிகள் மீதான தாக்குதல்கள், மற்றும் சிங்கள மொழியில் மாத்திரம் நீதிமன்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதனால் குறித்த கைதிகளுக்கு ஏற்படுகின்ற அநியாயம், மற்றும் அவர்கள் சட்டவல்லுனர்களின் உதவியைப் பெறுவதில் காணப்படுகின்ற அசௌகரியம் என பல இன்னல்களை இந்த சிறைக்கதிகள் அனுபவித்து வருகின்றனர்.

 

 

எனவே குறித்த கைதிகளை விடுதலைச் செய்து அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறின் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும் புபுது ஜாகொட எச்சரித்தார்.

 

--lhttp://www.lankaviews.com/ta/