02
Tue, Jul

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முஸ்லிம் - கத்தோலிக்க மக்கள் விழிப்போடும் - எச்சரிக்கையோடும் கையாளப்படும் தமிழர்களாம்!

இப்போ தமிழ் மக்களின் அரசியல் வெற்றிடத்தின் வெறுமைமையை நிரப்ப சீமான் சீற்றம் கொண்டு புறப்பட்டுள்ளார். அதுவும் குறுந்தேசிய பாசிஸ வெறியுடன் கூடிய ஆணவ—(ஆவண) அரசியல் அறிக்கை கொண்டு….!

தமிழர்களுக்கு தமிழர்களால் நடாத்தப்படும் கட்சி நாம் தமிழர் கட்சியாம்! இதற்கு பிரபாகரனைத் தவிர (சின்னம்-கொடி-கலர், நடை உடை பாவனை) மற்றெல்லாம் உண்டு. ஆனாலும் இதிலுள்ளவர்கள் "அசல்" இந்தியத் தமிழர்களாக மாத்திரம் இருக்க வேண்டுமாம்! இவ் இருப்பாளர்கள் எல்லோரும் கண்டிப்பாக பிரபாகரனின் தனித் தமிழ் ஈழத்திற்கு மாத்திரமே போராட வேண்டுமாம்!

இத்தமிழர்களில் முஸ்லிம்-கத்தோலிக்க மக்கள், நட்பு முரண் வகையிலும், அல்வழிப் பகை முரண் வகையிலும் (தலித் மக்கள் போல்) இடம்பெறுவர். அதற்கும் மேலால், எச்சரிக்கையோடும், விழிப்போடும், "அன்போடும்" கையாளப்பட வேண்டியவர்கள்!

இதைத்தானே "எங்கள் சீமான்" பிரபாகரனும் செய்தவர்! நட்பு-முரண் கொண்டு, தனக்கல்லாத சகலதையும், சகல தமிழர்களையும் இல்லாதாக்கினார், எச்சரிக்கையோடும், விழிப்போடும், "அன்பு கலந்து" சகல இனப்பிளவுகளையும், கறைபடிந்த இனப்படு கொலைகளையும் செய்தார்.

இதைத்தான் சீமான் தமிழ்ஈழம் கொண்டு தமிழகத்திலும் செய்ய முற்ப்டுகின்றார்?

ஆனால் இவ் வெறுமை கொண்ட குறுந்தேசிய பாசிஸ அரசியல் அங்கு எடுபடவேயில்லை. இதை அங்கிருந்து வரும் நாளாந்த ஊடகச் செய்திகள் சாட்சியமாக்குகின்றன.

"முதலாம் உலகப் போரின் அழிவுகளை சாதகமாகக் கொண்டு இத்தாலியின் பாசிஸ்டுகளும் ஜெர்மனியின் நாஜிக்களும் இனவெறியைத் தூண்டி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையைச் சாதகமாக்கி சீமான் என்ற பாசிஸ்டு தமிழக ஆட்சியைக் கோரி நிற்கிறார்!

முள்ளிவாய்க்கால் “நாம் தமிழர்” கட்சிக்கு தமிழ் நாட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான துருப்புச் சீட்டு! அவ்வளவு மட்டுமே!"

இப்படிப் பல அரசியல் விழிப்புக் கொண்ட, சமூகச் செயற்பாட்டாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் போராளிகள், பெரியாரின் அமைப்புக்கள் சீமானின் பாசிஸ அரசியல்ப் போக்கை கண்டித்து அம்பலப்படுத்துகின்றார்கள்.

இதை நம் நாடு கடந்தவர்களும் கண்டு கொள்வார்களா?

பொத்தாம் பொதுவாக நாடு கடந்த தமிழ்ஈழ அரசியல் என்பது மக்களுக்குதவா "புலன் பெயர்" வெறுமையாகவே உள்ளது