28
Fri, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வவுனியா வடக்கு நெடுங்கேணிப் பகுதியில் மற்றுமொரு மாணவி இராணுவத்தினரால் பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றிருக்கின்றது.

 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

நெடுங்கேணி பட்டறை பிரிந்தகுளம் என்ற கிராமத்தினைச் சேர்ந்த 18வயதுடைய மாணவி வீதியில் சென்று கொண்டிருந்த போது அந்தப் பகுதியில் அவரைப் பின்தொடர்ந்து சென்ற இராணுவத்தினரால் அருகில் இருந்த பற்றைக்குள் இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்.

இதன் பின்னர் சம்பவம் தொடர்பில் நெடுங்கேணிப் பொலிஸாரிடம் பாதிக்கப்பட்ட மாணவியாலும் பெற்றோராலும் முறையிடப்பட்டிருக்கின்றது. சம்பவத்தில் ஈடுபட்ட இராணுவத்தினனை நெடுங்கேணி பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக நெடுங்கேணியில் இருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

குறித்த மாணவி அண்மையில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றியிருந்தவர் என்று தெரியவருகின்றது.

--http://www.lankaviews.com