30
Sun, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிசாரும் படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலேயே இத்தகைய தேடுதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த மாவட்டத்தில், ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுவதாலும், விடுதலைப் புலிகள் மீண்டும் நாடு திரும்பி அமைதியை சீ்ர்குலைக்கலாம் என்று கருதப்படுவதாலும், இந்தத் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதுமன் இடம் மாற்றம்

இதே வேளை, விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் இராணுவப் பிரிவுத் தலைவரான பதுமன் என்று அழைக்கப்படும் சிவப்பிரமணியம் வரதநாதனை, திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து பூஸா பயங்கரவாத தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவருக்கான கூடுதல் பாதுகாப்பினை வழங்க வேண்டும் என பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே நீதிபதி இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.