25
Tue, Jun

முன்னணி செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

altதமிழ் நாட்டின் கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளப் போவதாக கூடங்குளம் அணுவுலைக்கு எதிரான மக்கள் இயக்கம் தெரிவித்திருந்த நிலையில் அதன் முதற்கட்ட விழிப்புனர்வு நடவடிக்கை இன்று மன்னார் நகரில் இடம்பெற்றது.

 

இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட ஆயர் பேரருட் தந்தை இராயப்பு ஜோசப் ஆண்டகை, முஸ்லிம் சமய  சமூகத் தலைவர்கள், மன்னார் மாவட்ட  மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் கூடங்குளம் அணுவுலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் நடவடிக்கைக் குழு உறுப்பினர்களான, முன்னிலை சோஷலிசக் கட்சியன் சார்பில் அதன் அரசியல் சபை உறுப்பினர் துமிந்த நாகமுவ, இயற்கை வள ஆய்வுக் கேந்திர நிலையத்தின் சார்ப்பில் ரவீந்ர காரியவசம், புவியின் நண்பர்கள் சூழல் அபிவிருத்தித் தளத்தின் சார்பில் கருணாதாச மூனகம, மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பூமித்தாயின் குழந்தைகள்  அமைப்பின் சார்பில் சுரேந்திர அஜித் ரூபசிங்க, அதன் மத்திய நிலையம் சார்பில் வங்கீச சுமனசேகர ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.

மேற்படி இயக்கத்தின் அறிமுக நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை (20)கொழும்பில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

alt

 

 

 

 

 

 

 

alt

alt

alt

alt