25
Tue, Jun

2017
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாழ் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் இன்றைய தினம் 45 ஆவது நாளில் சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்டு விட்டு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். 

யாழ். மாவட்ட பட்டதாரிகளின் போராட்டம் இன்று 45 ஆவது நாளாகவும்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் 51 ஆவது நாளாகவும், அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் 45 ஆவது நாளாகவும், திருகோணமலை மாவட்ட பட்டதாரிகள் 42 ஆவது நாளாகவும் தமக்கான நியமனங்களைக் கோரி மழை, வெயில் பாராமல்   கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வட மாகாணத்தில் சுமார் 3000 பட்டதாரிகளும் கிழக்கு மாகாணத்தில் சுமார் 8இ500 பட்டதாரிகளும் தொழிலுக்காக காத்திருந்திருக்கின்றனர்.

வடக்குஇ கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பாராளுமன்ற உறுப்பினர்களும் 61 மாகாண சபை உறுப்பினர்களும் உள்ள நிலையில்இ பட்டதாரிகளின் போராட்டத்திற்கு இன்னும் முடிவு கிடைக்காமை கவலைக்குரியதே என பட்டதாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

27/02/2017 தொடக்கம் இன்று வரை மாவட்ட செயலகங்களுடன் இணைந்து வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் மேற்கொண்ட பதிவு நடவடிக்கைகளில் இதுவரை பெறப்பட்ட வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் முழுமையான விபரம் மாவட்டரீதியாக பின்வருமாறு:

யாழ்ப்பாணம் -1800

வவுனியா -399

மன்னார் -250

முல்லைத்தீவு -227

கிளிநொச்சி -150

மொத்தம் -2826

மேற்குறிப்பிடப்பட்ட தரவுகள் இன்று ( 12/04/2017 ) மதியம் வடமாகாண ஆளுநரிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்படவுள்ளது என வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் அறிவித்திருந்தது.