28
Fri, Jun

2017
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரின் வேலை கேட்டு போராடும் தொடர் சத்தியகிரகம் இன்று 50வது நாளை எட்டியுள்ளது. கறுப்பு உடை, பட்டி அணிந்து வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு நகரின் மத்தியில் உள்ள மணிக்கூடு கோபுரத்தின் முன்னாள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.  

வேலையற்ற பட்டதாரிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தேரர் தென்ன மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தவைர் கிரிசாந் தலைமையில் இன்று இடம்பெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டு மணிக்கூட்டு கோபுரத்தை சுற்றி சுற்றி வந்து தமக்காக தொழிலை வழங்குமாறு கோரி கோசங்களை முழங்கிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அமைதியான முறையில் சாத்வீகமாக தாம் மேற்கொண்டு வரும் போராட்டம், வேறு வடிவங்களை எடுக்குமானால் அதற்கான முழுப் பொறுப்பினையும் இந்த நல்லாட்சி அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அங்கு ஊடகவியலாளர் மத்தியில்  தேரர் தென்ன கருத்து தெரிவித்திருந்தார்.