25
Tue, Jun

2017
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

1971ம் ஆண்டு ஏப்பிரல் எழுச்சி வீரர்களின் 46வது ஞாபகார்த்த நாள் இன்று முன்னிலை சோசலிச கட்சியால் அனுஸ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வு அவிசாவளை, தங்காலை மற்றம் குருணாகலை நகரத்தில் இடம்பெற்றது.

தங்காலை நகரத்தில் குழுமிய இடதுசாரிகள் செங்கொடி ஏந்தி ஊர்வலமாக சென்று, சணச மண்டபத்தில் ஒன்று கூடி எழுச்சி வீரர்களை நினைவு கூர்ந்தனர். இந்நிகழ்வுகளில் புபுது ஜயகொட, சேனாதீர குணதிலகா உட்பட பலர் உரையாற்றினார்கள். 

இந்நிகழ்வுகளில் ஏராளமான மக்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வானது ஒரு ஞாபகம் கூரும் நிகழ்வாக மட்டுமல்லாது 1971 மற்றும் 1989 -1990 எழுச்சிகளின் மகத்தான தோல்விகள் குறித்து பேசப்பட்டதுடன் எழுச்சி வீரர்களின் மாளாத குறிக்கோளான சோசலிச சமூகத்தை நிறுவுவதற்கான எதிர்கால திட்டங்கள் செயல்பாடுகள் பற்றியும் பேசப்பட்டது.