28
Fri, Jun

2017
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த 15 நாட்களாக அமைதியான முறையில் தமது நியாயமான கோரிக்கையினை வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தலைவர் ரி.கிஷாந்த்,  அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் உட்பட நான்கு பேருக்கு நீதிமன்ற அழைப்பானை வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் அரச கரும நடவடிக்கைகளுக்கும் குந்தகம் அல்லது இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளப்போவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸாரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.