25
Tue, Jun

2017
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கல்வி மற்றும் மருத்துவ சேவையினை தனியார் மயமாக்கும் செயற்பாடு இன்றைய நவதாராளவாத பொருயாதார கொள்கையின் பிரதான செயற்பாடாக உலகெங்கும் மூர்க்கத்தனமாக முன்தள்ளப்படுகின்றது. இதனை பொது மக்கள் உணராத வண்ணம் மெல்ல மெல்ல நடைமுறைப்படுத்தவதும்; தனியார் கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் திறப்பதற்கு ஊக்கம் அளிக்கப்படுவதும்,  சுகாதார சேவையில் தனியார் கம்பனிகளிற்கு செயற்பட அனுமதிஅளித்துள்ளமையும் நல்ல உதாரணங்களாகும். 

எமது நாட்டிலும் தனியார் பல்கலைக்கழகங்கள் பலவற்றை ஆரம்பிப்பதற்கு அரசு நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் பல ஏக்கர் நிலங்களை வழங்கி உள்ளது. அத்துடன் சில தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்பட தொடங்கியும் விட்டன. அதில் முக்கியமானது சையிட்டம் என்னும் மாலபேயில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ கல்லூரி. இந்த கல்லூரி மருத்துவத்தை கற்பிப்பதற்கு வேண்டிய எத்தகைய வசதிகளும் கொண்டிராததுடன் எந்த மருத்தவ நிறுவனத்தினதும் அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டதும் அல்லாத ஒன்றாகும். பொது மக்களின் உயிரோடு விளையாட முனையும் இந்த மருத்தவக் கல்லூரியை உடனடியாக மூடக்கோரி நாடு முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. 

முன்னிலை சோசலிசக் கட்சியும் கடந்த சில நாட்களாக தனியார் பல்கலைக்கழகங்களை மூடக்கோரியும், இலவச கல்வி மற்றும் மருத்துவ சேவையினை உறுதி செய்யக் கோரியும் மக்களை போராட வலியுறுத்தி பல விழிப்பு போராட்டங்களை நடாத்தி வருகின்றது. அந்த வகையில் நேற்று காலியிலும் இன்று (23/2/17) கேகாலையிலும் தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். 

இன்று மாத்தளை வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து சையிட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்திரந்தனர்.

 

மாத்தளை வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பொது மக்கள்