25
Tue, Jun

2016
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று 8ம் திகதி முற்பகல் 10 மணியளவில் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு முன்பாகவும், யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் அனைத்து அரசியற் கைதிகளையும் விடுவிக்க கோரி கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றன. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்க்கான தேசிய அமைப்பு இந்த போராட்டங்களை ஒழுங்கமைத்திருந்தது.

"அரசியல் கைதிகளை விடுவிப்பதற்காக அரசியல் தீர்வு ஒன்றை எடுப்போம்!, போர் முடிந்து எழு வருடங்கள் கழிந்துவிட்டன! அரசியல் கைதிகளுக்கான விடுதலை எங்கே?" போன்ற கோசங்களை எழும்பிய வண்ணம் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர்.

அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், உறவினர், இடதுசாரி அரசியல் கட்சிகள், கைதிகளின் விடுதலைக்காக போராடும் அமைப்பினர், பல்கலைக்கழக மாணவர்கள், மதகுரமார்கள், கலைஞர்கள், ஆசிரிய சங்கங்கள் மற்றும் அரசியல்வாதிகள் இந்த ஆர்ப்பாட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுத்திருந்தனர்.