25
Tue, Jun

2016
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சம உரிமை இயக்கத்தின் கையெழுத்துப் போராட்டமானது நேற்றைய தினம் (15/7/2016) மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்றது. இதன்போது அதிகளவான பொதுமக்கள் குறித்த கையெழுத்து போராட்டத்திற்கு ஒத்துழைப்பை வழங்கி, கையெழுத்து இட்டுச்சென்றனர்.

சம உரிமை இயக்கத்தின் அதிகமான ஏற்பாட்டாளர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர். இக்கையெழுத்து போராட்டமானது வடக்கில் (04/07/2016) ஆரம்பமாகி கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளில் நடைபெற்று வருகின்றது. மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான நகரப்பகுதியில் கடந்த 11ம் மற்றும் 12ம் திகதிகளில் இடம்பெற்றது. இதனை தொடர்ந்து 14ம் மற்றும் 15ம் திகதிகளில் திருமலை மற்றும் அதனை அண்டிய நகரப்பகுதிகளில் இடம்பெற்றது.

இதன்போது மக்களைத் தெளிவுபடுத்தும் முகமாக சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர்களினால் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் "யுத்த பாதிப்புக்கு இப்போதாவது இழப்பீடு கொடு", "அபகரித்த காணிகளை திருப்பிக் கொடு" என்ற வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகளையும் கிழக்கு மாகாணம் எங்கும் பரவலாக சம உரிமை இயக்கத்தினர் ஒட்டியுள்ளனர்.

இன்னும் ஏன் பார்த்திருக்க வேண்டும்?