28
Fri, Jun

2015
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மீதோட்டமுல்ல குப்பைமேட்டால் ஏற்படும் சுகாதார மற்றும் சூழல் சீர்கேடுகளால் அதனை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் பல வருடங்களாக போராடிவருகின்றனர். மைத்திரி அரசு இந்த குப்பை மேட்டை அகற்றுவதற்கு பதிலாக விஸ்தரிக்கும் திட்டத்துடன் மேலும் அப்பகுதியில் மக்களின் காணிகளை அபகரிக்கும் செயலில் இறங்கி உள்ளது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் அப்பகுதியில் சத்தியாகக்கிரக போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். ஆளும் கட்சியின் அப்பிரதேச நகரசபை தலைவர் தலைமையில் வந்திருந்த குண்டர்கள், போராட்டம் நடாத்தியவர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொணடிருந்தனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மற்றும் போராட்ட மக்களிற்கு சட்ட உதவியளித்து போராட்டத்தை ஒருங்கமைத்த சட்டத்தரணி நுவான் போககேயும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சட்டத்தரணி நுவான் போபகேயும் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய அப்பகுதி பொதுமகன் ஒருவரும் இன்று போலி குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்களாக தெரிவிக்கப்பட்டுள்ளவை; நீதிமன்ற தடை உத்தரவை மீறி போராட்டத்தை நடத்தியமை மற்றும் தாக்குதல் நடாத்தியவர்கள் போட்ட போலி வழக்கான அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதான வழக்கு ஆகும்.