25
Tue, Jun

விருந்தினர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையின் தென்மாகாண நகரமான அளுத்கம மற்றும் தர்கா நகரில் முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் தாக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தக்கொண்டிருக்கின்றன.

ஒரு பௌத்த பிக்குவை முஸ்லிம் இளைஞர்கள் தாக்கியதாக பொய்க் குற்றச்சாட்டு ஒன்றைச் சுமத்தி பௌத்த இனவாதிகளால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அரசு மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளது.

அண்மைக்காலங்களில் ராஜபக்ஸ அரசுக்கு எதிராக நடைபெறவிருந்த பல்கலைக்கழக மாணவா்களின் அனேக ஆா்ப்பாட்டஙகள் நீதிமன்ற தீா்ப்பின் மூலம் அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்ற போா்வையில் தடைசெய்யப்பட்டன.

அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் செய்த பல போராட்டங்களை ராஜபக்ஸவின் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் படை துப்பாக்கிப் பிரயோகம் செய்து மக்களை கொன்று ஆா்ப்பாட்டங்களை முடக்கியது.

ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சரத் பொன்சேகாவை ஆதரித்து இடம் பெற்ற பௌத்த பி்க்குகளின் உண்ணாவிரத போராட்டத்தை அடித்து உதைத்து கலைத்தது.

தனது அரசைப் பாதுகாத்துக்கொள்ள ஆயுத பலத்தை பயன்படுத்தி மக்களின் போராட்டங்களை நசுக்கும் மஹிந்த அரசு, இன்று முஸ்லிம்களுக்கெதிரான இனவாதிகளின் ஆா்ப்பாட்டங்களுக்கு எவ்வித தடையும் போடாமல் இனவாத சக்திகளுக்கு அங்கீகாரம் வழங்கி வருகின்றது.

இந்த இனவாதிகள் அண்மைக்காலமாக முஸ்லிம்களின் வா்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் பலவற்றை சேதமாக்கி இருக்கின்றார்கள். ஆனால் குற்றவாளிகள் யாரும் இதுவரை சட்டத்தி்ன முன் நிறுத்தப்படவில்லை.

-நன்றி : பதிரகலம்