25
Tue, Jun

ஆவணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜக்கிய நாடுகள் சபையின் 28வது கூட்டம் கியூபா நாட்டின் மீது உள்ள பொருளாதார அரசியல் தடைகளை தொடர்வது எனத் தீர்மானித்துள்ளது. கியூபா மீதான அமெரிக்க முன்னெடுப்பான இந்த தீர்மானத்தால் கியூப மக்கள் பொருளாதார நெருக்கடியிற்குள் தொடர்ந்தும் அல்லல்படுகின்றனர். மேலும் ஏகாதிபத்தியங்களான அமெரிக்கா மற்றும் ஜரோப்பிய நாடுகளின் பின்னணியில் இயங்கும் ஆயுத குழுக்களின் உள்நாட்டு யுத்தத்தினால் பல மில்லியன் கணக்கான சிரியா மக்கள் நாட்டை விட்டு வெளியேறி ஜரோப்பா நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

இது ஜரோப்பாவில் பாரிய நெருக்கடி நிலைமையினை தோற்றுவித்துள்ளது. ஏகாதிபத்திய யுத்தம் காரணமாக சிரியாவில் தினமும் பல லட்சக்கணக்கான சாதாரண மக்கள் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களது வீடு, வாசல்கள், சொத்துக்கள், கிராமங்கள், நகரங்கள் பேரழிவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

சிரியா மற்றும் கியூபா மீதான ஏகாதிபத்திய தலையீடுகளை நிறுத்தக் கோரியும் சிரியாவில் நிகழும் மனிதப் பேரவலத்திற்கு எதிராகவும் எதிர்வரும் ஒக்டோபர் 28ம் திகதி பகல் 12 மணிக்கு கொழும்பில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை சோசலிச கட்சி அழைப்பு விடுத்துள்ளது.