25
Tue, Jun

2014
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த வியாழன் 29/10/2015 அன்று கொழும்பில் பல்கலைக்கழக ஆணைக்குழு அலுவலகத்திற்கு,  அதிஉயர் கணக்காளர் பட்டப்படிப்பினை (HNDA) மாணவர்கள் ஊர்வலமாக சென்று தமது கல்வி உரிமைக்காக மகஜர் ஒன்றினை சமர்ப்பிக்க சென்றிருந்த வேளையில் "நல்லாட்சி" அரச படைகளின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகினர்.

அரச படைகளின் மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்தும், உரிமைக்காக ஜனநாயக வழிகளில் போராடும் உரிமையினை வலியுறுத்தியும்; யாழ் மற்றும் திருமலை தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் உட்பட தென்னிலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த இரு நாட்களாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம்

யாழ். உயர் தொழிநுட்பவியல் நிறுவன மாணவர்களால், இன்று (1.11.2015)காலை இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. HNDA மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்த மாணவர்கள், வகுப்பினையும் பகிஷ்கரித்துள்ளனர்.


திருகோணமலை

திருகோணமலை-தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் , 31/10/2015 கவனயீர்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. HNDA மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்த மாணவர்கள், வகுப்பினையும் பகிஷ்கரித்துள்ளனர்.

 

தென்னிலங்கை